கடனீரேரி முகாமைத்துவம்

இலங்கையில் பரந்துள்ள 116 கடனீரேரிகளை அபிவிருத்தி செய்வதால் மீனவ சமூகம் பெரும் நன்மையடைவதுடன், சுற்றுலா தொழிலும் ஊக்கம் பெற்று நன்மையடையூம். 2015 டிசம்பர் 13ஆந் திகதி ஒரு விசேட அலகு கௌரவ அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இது கடனீரேரி கடற்றொழில் மற்றும்  வளங்கள் பற்றி கவனமெடுக்கும். எமது மக்கள் கடனீரேரிகளில் குப்பை கூலங்களை கொட்டும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். dfar (3)இப்பழக்கத்தை தடுக்கவும் கடனீரேரிகளைப் பாதுகாக்கவும் ஒரு தொகுதி சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் அமுல்படுத்தவதற்கான அவசியத் தேவை கடனீரேரி முகாமைத்துவ அலகின் குறிக்கோள் வெளியிலிருந்தும், எமது திணைக்களத்திலிருந்தும் கடனீரேரி முகாமைத்துவம் பற்றி தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குவிதிகளை இலகுவாக்கும் உதவிகளைப் பெறுதலாகும். கடனீரேரி முகாமைத்துவ அலகினுhடாக ஒரு கடனீரேரி முகாமைத்துவ குழுவை  தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.   ஒவ்வொரு கடனீரேரிகளும் 12 குழுக்களைக் கொண்டிருக்கும். அதன் பின்னர் ஒரு மாவட்டக் குழு ஒன்றை உருவாக்குவதுடன், அதன் தலைவராக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் சம்பந்தப்படுவார். அத்துடன் மாவட்ட செயலாளர் அதன் இணைத் தலைவராக நியமிக்கப்படுவார். பின்வரும் 05 கடனீரேரிகளுக்குமான குழு நியமனம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதன் எல்லைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவையாவன – நீர்கொழும்பு சிலாபம், மலாலா, எம்பிலிகலா, கொக்கல மற்றும் கொக்கிலாய் ஆகும். அடுத்த ஆண்டளவில் 30 கடனீரேரிகளின் எல்லைகள் வரையறுக்க உத்தேசித்துள்ளது. கடனீரேரிகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற் கட்டமாக குழுக்களின் உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கடனீரேரிகளில் மீன் வளர்ப்புக்கான நடவடிக்கை நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

நடைமுறை அதிரடி ஏற்பாடு இணைந்து கடற்றொழில் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு குளம் திட்டம் அறிமுக வீடியோ பார்க்க