ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை

2013ஆம் ஆண்டு வரை இலங்கையின் சட்ட சட்டக அமுலுக்கு முன் எமது கடற்றொழில் நடவடிக்கை இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ)  மட்டுப்பட்டிருந்தது. ஆனால் பல்தினப் படகுகளின் வளர்ச்சியுடன் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டதுடன், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகாமைத்துவத்திற்கான தேவையும் ஏற்பட்டது. இவ்வாறான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக்கு ஏதுவான காரணியாக விளங்குவது பல்வேறு கடற்றொழில்சார்  சர்வதேச சமவாயங்களுக்கும்இ உடன்பாடுகளுக்கும் கைச்சாத்திடப்பட்டமையேயாகும். இவை கடல்சார்ந்த சட்டங்களின் கீழ் ஐக்கிய நாடுகள் சமவாய்ததின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். இலங்கை அரசாங்கம் பல்வேறு கடற்றொழில் சார்ந்த சர்வதேச உடன்படிக்கைகளிலும் சமவாயங்களிலும் கைச்சாத்திட்ட நாடு என்ற வகையில் இவற்றின் தேவைப்பாடுகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் செயற்படுவதற்கான கடப்பாட்டுக்குள் கட்டுப்பட்டுள்ளது. dfar (7)இவ்வாறு செயற்படத் தவறியமையால், அதாவது சில குறைபாடுகளால் எமது நாடு மிகவும் முக்கியமான ஏற்றுமதி சந்தையான ஐரோப்பிய சங்கத்திற்கு மீன் ஏற்றுமதி செய்வதை 2015 ஜனவரி முதல் இழந்தமையேயாகும். இந்த ஏற்றுமதி பொதுவாக எமது நாட்டின்  பொருளாதாரத்தையூம் குறிப்பாக மீனவ சமூகத்தையூம்இ ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களையூம் மிகவூம் பாரதுhரமாக பாதித்தாலும் இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலுள்ள கடற்றொழில் முகாமைத்துவ  அதிகாரிகளுக்கு பொறுப்புள்ள கடற்றொழில் கலாச்சாரத்தை உருவாக்கும் நடைமுறைகளையும், முகாமைத்துவ செயற்பாடுகளையும் நிறுவுவதற்கான பொறுப்பை வழங்குவதன் மூலம் ஐரோப்பிய சங்கத்தின் மீன் ஏற்றுமதித் தடையை நீக்கவும் இது உதவும். இதற்கிணங்க ஆழ்கடலில் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத, ஒழுங்கமைப்பற்ற (IUU) மீன்பிடி முறையைக் கட்டுப்படுத்துவதற்கான பல கொள்கைத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய முகாமைத்துவ நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. இச்செயல்முறைகள் இலங்கையின் கலாச்சாரத்துக்கு புதியவை எனவும், இதனை நவீனமயமானதெனவும் கொள்ளலாம். எப்படியாயினும் இந்த புதிய அணுகுமுறையை பங்குதாரர்களுக்கும் விசேடமாக கடற்றொழில் அலுவலர்களுக்கும் கொண்டு செல்வது பாரிய சவாலாக அமையும். பல பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்பட்டாலும், ஒருங்கிணைக்கப்பட்ட நிருவாகபூர்வ வழிகாட்டல் திட்டம் சம்பந்தப்பட்ட அலுவலர்களையும் பங்குதாரர்களையும் சரியான செயல்முறைகளைப் பின்பற்ற உதவுவதோடு ஒருங்கிணைப்பு செயற்பாடுகளையும் இலகுவாக்கும். இந்த செயல்முறையின் முக்கிய நோக்கமானது, இலங்கையில் கடற்றொழில் பிரிவில் ஒரு பொறுப்புள்ள கடற்றொழில் கலாசாரத்தை உருவாக்குவதற்கு எமது அலுவலர்களையும் பங்குதாரர்களையும் ஊக்குவிப்பதேயாகும்.

இலங்கை சர்வதேச கடல்களில் மீன்பிடித் முகாமைத்துவ செயல்முறை பற்றி வீடியோ பார்க்க