நிர்வாக ஒழுங்கமைப்பு

1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் பிரகாரம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் செயற்படுகின்றது.  எமது திணைக்களம் அதன் கடமைகளை திறம்பட செய்யும் பொருட்டு ஆறு (06) முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. கடற்றொழில் முகாமைத்துவ பிரிவு.
  2. கடற்றொழில் கைத்தொழில் பிரிவு.
  3. கண்காணிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு.
  4. கடற்றொழில் உற்பத்தி தரக் கட்டுப்பாட்டு;ப பிரிவு.
  5. நிதிப் பிரிவு.
  6. நிர்வாகப் பிரிவு.

dfar (4)இதற்கு மேலதிகமாக ஒரு ஆழ்கடல் முகாமைத்துவ அலகு, ஒரு கடனீரேரி முகாமைத்துவ அலகும் எமது திணைக்களத்தின் கீழ் செயற்படுகின்றன. எமது நிறுவனத்திற்கு கடைசியாக இணைக்கப்பட்டதுதான படகு கண்காணிப்பு நிலையம். இது ஆழ்கடல் கடற்றொழில் படகுத் தொகுதி, செய்மதி கண்காணிப்பு முறைமையின் மூலம் செயற்படும். தலைமை அலுவலகத்தை விட இலங்கையில் கரையோர மாவட்டங்களில் பதினொன்று (11) மாவட்ட உதவிப் பணிப்பாளர்களின் அலுவலகங்களின் கீழ் சகல மீனவ கிராமங்களையும் இணைக்கும் வகையில் நுhற்றி நாற்பத்தெட்டு (148) கடற்றொழில் பரிசோதகர்கள் பிரிவுகளும் செயற்படுகின்றன. ஆழ்கடல் கடற்றொழில் நடவடிக்கைகளை முகாமைப்படுத்துவதற்கு 18 துறைமுக அலுவலர்களும் 21 வானொலி தொடர்பாடல் நிலையங்களும் செயற்பட்டு வருகின்றன. இவை பல்தினப் படகுகளுடன் சிற்றலை வரிசையுடன் (Short Wave) தொடர்பாடல் மேற்கொள்ளும்.