கரையோர கடற்றொழில்

கடற்றொழில் சார்ந்த உற்பத்திகளையும், தொழில் வாய்ப்புகளையும் நோக்குமிடத்து, கண்டத் தடாகத்தில் மேற்கொள்ளப்படும் ஓர்தினப் படகுகளின் செயற்பாடுகள் உபபிரிவில் மிகவும் முக்கிய பங்கை வகிப்பதோடு, தேசிய மீன் உற்பத்தியில் அதிகூடிய பங்களிப்பையும் இது வழங்கி வருகிறது. எமது திட்ட காலப் பகுதியில் இது குறிப்பிட்ட அளவுக்கே கொண்டு செல்லப்படுவதாகவும் கட்டுப்பாடுகளாலும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் ஏற்படும் சு+ழல் மாற்றங்களினாலும் இது ஒரு வரையறைக்குட்பட்டது எனலாம்.  இக் காரணத்தினால் உள்நாட்டு, கடற்கரைக்கு அப்பாலான ஆழ்கடல், உவர்நீர் மீன்பிடி வளங்களை வலுவுள்ள தொழில்நுட்பத்தைப் பிரயோகித்து மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாட்டை எதிர்வு கூறுவதோடு, இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

dfar (6)இத்திட்;;டத்தில் கரையோர மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. 2011இன் இடைக்காலத்திற்குப் பின் கரையோர, ஆழ்கடல் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இத் திட்டம் வழிவகுக்கும். கண்டத்தடாகத்தினுள் முக்கிய கரையை அண்டிய மீன் வளங்கள் மற்றும் நிலையான ஆண்டுக்கான விளைவூ 170இ000 மெற்றிக் தொன் என ஃபிறீட் ஜொப்ற் 13 நான்சென்ற் மதிப்பீடு செய்துள்ளது. (சமுத்திர மீன் உற்பத்தி 10,000 மெற்றிக் தொன் மற்றும் கடலடி சார்ந்த மீன் உற்பத்தி 70,000 மெற்றிக் தொன்னாகும்) என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே கரையோரப் பகுதியிலிருந்து பெறப்படும் நிலைத்து நிற்கக்;கூடிய விளைவுகளின் பெறுபேறு அண்ணளவாக 250,000 மெற்றிக் தொன் எனலாம். (இது முன்பு பெறப்பட்டதைவிட மேல் அளவை உயிரின அடர்த்தி அதே அளவில் இருப்பதாக ஊகித்து எடுக்கப்பட்டது) 2013இல் மேற்கொள்ளப்பட்ட கரையோர மீன் உற்பத்தி 250,000 மெற்றிக் தொன்னாக அளவீடு செய்யப்பட்டாலும் அளவீடு செய்யப்படாத கரையோரப் பகுதிகளில் மீன் அதிகளவில் பிடிக்கக்கூடிய இடங்களாகும். ஆகவே இவ்விடங்களிலுள்ள உயிரின அடர்த்தி அதி உயர்வாக இருக்க வேண்டுமென ஊகிப்பதில் தவறியமை என்பதுடன் இங்குள்ள வளம் மதிப்பிடப்பட்ட 80000 மெற்றிக் தொன்னை விட கூடுதலாக இருக்கும்.