கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உதவிக்குறிப்புகள்

கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் நோய் ஏற்பட்டு 2 தொடக்கம் 10 நாட்களிற்குள் தென்படும். எனினும் உடலில் அறிகுறிகள் தென்படும் முன் இவ் வைரஸ் ஆனது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வெளிச்சூழலிற்கு பரவிவிடும். எனவே இவ் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பாதுகாப்பு முறைமைகளை அதற்கு முன்னரே ஏற்படுத்துவது இன்றியமையாதது.

இந்நோய்த்தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான ஆலோசனைகள்

 • வீட்டிலிருந்து வெளியே செல்வதை இயலுமானவரை குறைத்து வீட்டினுள் இருத்தல்.
 • கூடுமானவரை நோய்த்தொற்றிற்கு ஆளாகும் குழுக்களை அல்லது நபர்களை வீட்டினுள்ளோ அல்லது வேலைத்தளத்திலோ தொடர்புகொள்வதை குறைத்தல்.
 • கைகளை சவர்;க்காரத்தினாலோ அல்லது திரவ சவர்;க்காரத்தினாலோ அடிக்கடி கழுவவேண்டும். தேவையேற்படும் போது தொற்றுநீக்கிகளை பாவித்து தொற்றினை நீக்கலாம்.
 • முறையான சுகாதார செயற்பாடுகளின் முலம் நோய்ப்பரம்பலை குறைக்கலாம்.
 • காற்று உட்செல்லக்கூடியவாறு அறை, கதவு மற்றும் யன்னல்களைத் திறந்து வைக்கவும்.
 • தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையால் அல்லது திசுக்கடதாசியால் வாய் மற்றும் மூக்குப் பகுதியை மூடவேண்டும். திசுக்கடதாசியெனில் பாவித்த உடன் குப்பையில் அகற்றவேண்டும்.
 • இரு நபர்களுக்கிடையில் பேசும் போது குறைந்தது ஒரு மீட்டர் (1அ) இடைவெளியைப் பேணுங்கள்.

உங்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால்,

 • முகக்கவசம் அணிவதால் நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம்.
 • தொற்றுநோய் நிபுணர் அல்லது சுகாதார உத்தியோகத்தரை நாடவும்.
 • நோய் ஏற்படாமல் மேலதிக தகவலுக்காக சிபாரிசு செய்யப்பட்ட வைத்தியசாலையை அணுகி சிகிச்சை பெறவும்.
 • வீட்டிலுள்ளவர்கள் மற்றும் வேலைத்தளத்திலுள்ளவர்கள் இந்நோய்த்தொற்றைத் தவிர்க்க முகக் கவசத்தை அணியவும்.

எமது சேவைகள்